ரணிலினால் இதைச் செய்ய முடியுமா..? அநுரகுமாரவின் பகிரங்க சவால்
'தேர்தலைப் பிற்போடுகின்ற சூழ்ச்சிக்கு எதிரான எதிர்ப்பு' என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று (26) அரசுக்கு எதிராகப் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அநுரகுமார எம்.பி. உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஜனநாயக உரிமையான வாக்குரிமையை மக்களிடமிருந்து ரணில் விக்கிரமசிங்க பறித்தெடுத்துள்ளார். நாட்டில் வாழும் அனைத்து மக்கள் முன்னிலையிலும் அவர் இன்று செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எமக்கு வடக்கா, கிழக்கா, தெற்கா, மேற்கா என்று எவ்வித பிரச்சினையும் இல்லை. எவ்வித பேதமும் இன்றி மக்கள் முன்னிலையில் எம்மால் செல்ல முடியும். மக்களை ஒன்றுதிரட்டவும் எம்மால் முடியும்.
ரணில் அரசால் இதைச் செய்ய முடியுமா? ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்று 8 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்தக் காலப்பகுதியில் நூறு மக்களையாவது திரட்டி ஏதாவது ஒரு கூட்டத்தை அவர் நடத்தினரா?
ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று நாட்டின் அனைத்துப் பகுதிகளும் தடை செய்யப்பட்ட பூமியாகிவிட்டது. நாட்டினதும் மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவரால் முடியாது" - என்றார்.
Post a Comment