உயர் நீதிமன்றத்தில் களமிறங்கி வாதாடிய ஹக்கீம்
தேர்தல் சட்ட ஏற்பாடுகள் பிழையாக பொருள் கோடல் செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, உயர் நீதிமன்றத்தில் ரவூப் ஹக்கீம் எம்.பி வாதிட்ட வழக்கில், தெஹியத்த கண்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை வலுவிழக்கச் செய்து உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது .குறித்த வழக்கு மீண்டும் 21 திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது
ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் எம் நயீமுல்லாஹ் மற்றும் ஆதிவாசிகள் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் உட்பட தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் முர்து பெர்ணாண்டோ,யசந்த கோதாகொட, ஈ.ஏ.ஜீ.ஆர் அமரசேகர ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
இதில்,சட்டத்தரணி நஸ்ரினாவின் அனுசரணையுடன் சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம் (முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ),சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்
மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் நீண்ட வாதங்களை முன்வைத்து, தெஹியத்தகண்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு வேண்டிக்கொண்டார்
மனுதாரர் மற்றும் அரச தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை செவிமடுத்த உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் திகாமடுல்ல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரின் பிரஸ்தாப தீர்மானத்துக்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்து வழக்கை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
Post a Comment