முதுகெலும்பற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு அச்சம், சர்வதிகார ஆட்சிக்கும் முயற்சி
இன்று நாடும் வங்குரோத்தாகி மக்களின் ஜீவனோபாய வாழ்வும் சீர்குலைந்துள்ளதாகவும்,
நாட்டிற்கு சரியான தலைமைத்துவம் இல்லை எனவும்,ஜனாதிபதியும் பாராளுமன்றம் வந்து பைத்தியம் பிடித்தது போல நடந்து கொள்ளும் நிலை இன்று உருவாகியுள்ளதாகவும்,
இன்று ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வந்து தேர்தலை நிறுத்துமாறு எதிர்க்கட்சிகள் கோரியதாக தெரிவித்தாலும்,இந்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று,கூட்டங்களை நடத்தி,மக்களுக்கு அறிவுறுத்தி,எங்களது வலுவான தேர்தல் பிரச்சாரத்தை செயல்படுத்தி வருவதே நிதர்சனம் எனவும்,இன்று ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குள்ளேயே போலியான கதைகளை இழுத்து மக்களின் அபிப்பிராயங்களை திரிபுபடுத்தி தனது திரிபுச் சிந்தனைகளால் நாட்டில் பொய்களை கோலோச்ச முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு கட்டத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் ஒருமித்த முடிவு இல்லாமல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாக கூறுகிறார்,அதே சமயம் நாட்டில் தேர்தல் இல்லை என்றும் கூறுகிறார்,அதனால் ஒத்திவைக்க தேர்தலொன்று இல்லலை என்கிறார்.இது என்ன பைத்தியக்காரக் கதைகள் என தெரிவித்த அவர்,இப்படி பைத்தியக்காரத்தனமான பேச்சுக்களும்,
கிறுக்குத்தனமான அரசாங்கமுமாக செயற்படுவதால்தான் நாடு நாளுக்கு நாள் ஒரு பெரிய பாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணம் 250 சதவீதம் உயர்த்தப்பட்டு,வரி அதிகமாக அறவிட்டு,எரிவாயு விலையை அதிகரித்து,
எண்ணெய் விலையை அதிகரித்து,மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படும் அதேவேளையில்,
நாடாளுமன்றத்திற்கு வந்தும் பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி நாட்டு மக்களின் மனித உரிமைகளை மீறுகிறார் எனவும்,இந்நாட்டு மக்களின் வாக்குரிமையையும் ஜனநாயக உரிமையையும் பறிப்பதாக தெரிவித்த அவர் இது சர்வாதிகார நாடு அல்ல எனவும்,இது ஒரு ஜனநாயக நாடாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மீண்டும் நாம் அனைவரும் கைகோர்த்து இந்நாட்டின் 220 இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க அழைப்பும் விடுத்தார்.
நாட்டையும் பைத்தியக்காரத்தனமாக்கும் இந்த யானை காகம் மொட்டு அரசை விரட்டியடித்து,இந்த ஜனாதிபதியை எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கும் பயணத்தின் முதல் அடியை உள்ளூராட்சி தேர்தலை நடத்தி வெற்றி பெறுவதுதான் மூலம் ஆரம்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எங்களுடன் கைகோர்த்து இந்நாட்டை சீரழிக்கும் பைத்தியகாரத்தனமான ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகபட்ச பலத்தை வழங்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஒவ்வொரு முறையும் வடக்கிற்கு வரும்போதும் பொது மக்கள் வீதியில் இறங்குகிறார்கள் எனவும்,முதுகெலும்பற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் வடக்கு மக்களுக்கு எந்த பணியையும் முன்னெடுக்கவில்லை எனவும்,யாழ்ப்பாணத்திலும் வடக்கில் ஏனைய மாவட்டங்களிலும் உள்ள பொது மக்களின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குப் பதில் வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
காங்கேசன்துறை பிரதேசத்தில் நேற்று (23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.
Post a Comment