Header Ads



புதுடெல்லியில் பிறந்து, பாகிஸ்தானில் வளர்ந்த முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் டுபாயில் காலமானார்


பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் உடல்நலக்குறைவால் டுபாயில் காலமானார். அவருக்கு வயது 79 ஆகும்.


நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.


1943-ல் சுதந்திரத்துக்கு முன்பு புதுடெல்லியில் பிறந்தார் பர்வேஸ் முஷாரப். தேச பிரிவினையின் போது முஷாரப் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம்பெயர்ந்தது.


1964 இல் பாகிஸ்தான் இராணுவத்தில் சேர்ந்த முஷாரப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியானார். நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து 1999-ல் அதிகாரத்தை கைப்பற்றினார் .


இராணுவ ஆட்சியை பிரகடன் செய்த முஷாரப், பாகிஸ்தான் பாராளுமன்றதை கலைத்து அரசியல் சட்டத்தையும் முடக்கினார். 2001-ல் பாகிஸ்தான் ஜனாதிபதியாக பதவியேற்ற முஷாரப், காஷ்மீர் பிரச்சனைக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.