பிரதமர் பதவியில் இருந்து, நான் விலகப் போகிறேனா..?
பிரதமர் பதவியில் இருந்து நான் இராஜினாமா செய்யப்போவதாக வெளியான செய்திகளும் அறிக்கைகளும் முற்றிலும் பொய்யானவை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உதவியைக் கோரியுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை தொடர்பில், கேட்டபோதே பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை குழப்பும் வகையிலேயே இவ்வாறான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுக்கின்றன. அதிலொன்றுதான் இது என்றார்.
பிரதமர் பதவி தொடர்பில் அவ்வாறான யோசனையோ அல்லது கலந்துரையாடலோ இதுவரையிலும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.
Post a Comment