Header Ads



பிரபாகரனுக்கு பிறகு அடுத்தவர் வரக்கூடாது என, இந்திய உளவுத் துறையின் திட்டமாக இருக்கலாம் - தடா ரஹீம்


புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பழ.நெடுமாறன் வெளியிட்ட கருத்து சந்தேகத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது என இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.


தஞ்சாவூரில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ் தேசிய மூத்த தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அத்துடன் தலைவர் பிரபாகரன் மற்றும் அவருடைய குடும்பத்துடன் நான் தொடர்பில் இருக்கிறேன், அவர்களுடைய அனுமதியிலேயே இந்த தகவலை நான் வெளியிடுகிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.


மேலும் விரைவாக தமிழீழம் தொடர்பாக விரிவான அறிக்கையை பிரபாகரன் வெளியிடுவார் எனவும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் பிரபாகரன் தொடர்பாக தமிழ் தேசிய தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது என இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் அளித்த சிறப்பு பேட்டி ஒன்றில், பிரபாகரன் இறப்பிற்கு பிறகு அடுத்த தலைவர் யாரேனும் உருவாகி விடக்கூடாது என்பதற்கான இந்திய உளவுத் துறையின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கருத்து வெளிவந்து இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.