ஜனாதிபதிக்கு ஹர்ஷ விடுத்துள்ள சவால்
உழைக்கும் போது செலுத்தும் வரி அறவீடு மூலம் 100 பில்லியன் ரூபாவை சேகரிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
உழைக்கும் போது செலுத்தும் வரி மூலம் 100 பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் கூறியது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறிய இந்த விடயத்தை ஜனாதிபதி ரணில் விளக்க வேண்டுமென சவால் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
உழைக்கும் போது செலுத்தும் வரி விதிக்கும் தொகையை இரண்டு இலட்சம் ரூபாவாக உயர்த்தினால் 63 பில்லியன் ரூபா வருமானத்தை இழக்க நேரிடும் என ஜனாதிபதி வெளியிட்ட கருத்தும் பிழையானது எனவும் இதனையும் அவர் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். Twin
Post a Comment