Header Ads



ஹெலிகெப்டரில் இருந்து வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு பறந்த கடிதம் - திட்டத்தை முறியடிக்க கோரிக்கை


உள்ளூராட்சி மன்ற தேர்தல் தாமதப்படுத்தப்படுவது தொடர்பில் தௌிவுபடுத்தி நாட்டிலுள்ள அனைத்து தூதரகங்களுக்கும் சுதந்திர மக்கள் கூட்டணி கடிதம் அனுப்பியுள்ளது.


இலங்கையில் எந்தவொரு தேர்தலை நடத்துவதற்குமான உரிய காலப்பகுதி, அரசியலமைப்பு ,ஏனைய சட்டங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவற்றை கடைப்பிடிப்பது கட்டாயமானது என்பதுடன், அவற்றின் உள்ளடக்கத்தை மாற்றுவதற்கோ அல்லது தமது விருப்பத்திற்கு ஏற்ப செயற்படுவதற்கோ எவருக்கும்  இயலுமை கிடையாது எனவும் சுதந்திர மக்கள்  கூட்டணி கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. 


வரலாற்றில் முதற்தடவையாக நாட்டில் நிதியில்லை எனும் காரணத்தைக் கூறி தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாகவும் இந்த தீர்மானத்தின் பெறுபேறுகள் எதிர்காலத்தில் தெரியவரும் எனவும் சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த விடயம் தொடர்பில் தங்களின் நாடுகளை தௌிவுபடுத்தி, இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திர மக்கள்  கூட்டணி , வௌிநாட்டு தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளது. 


திலங்க சுமதிபால, பேராசிரியர் G.L.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, தயாசிறி ஜயசேகர, அநுரபிரியதர்சன யாப்பா, கலாநிதி நாலக்க கொடஹேவா, அசங்க நவரத்ன, கலாநிதி ஜீ.வீரசிங்க ஆகியோர் குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

1 comment:

  1. தற்போதுள்ள நிலைமையில் என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்யாது இந்த மூன்று மட்டைகளும் வௌிநாட்டு தூதுவர்களுக்கு எழுதி நாட்டு சனாதிபதி நாட்டின் சட்டத்தை மீறுகின்றார். அதற்கு உங்கள் நாட்டுத் தலைவர்கள் மூலம் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் எனக் கேட்டால் அந்த தூதுவர்களால் என்ன செய்யமுடியும். அந்தந்த நாடுகள் அவர்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்ள முடியும் அதற்கு இலங்கையை எவ்வாறு பாவிக்கலாம் என்ற ஒரே நோக்கத்துக்காகத் தான் இந்த நாட்டில் அவர்களின் தூதரகங்களைத் ஆரம்பித்திருக்கின்றார்கள். இனி அவர்களின் பிரச்சினைகளை ஒருபக்கம் போட்டுவிட்டு இவர்களின் பிரச்சினைக்கு ஈடுபடும் அளவுக்கு இவர்களைப் போன்ற மக்கு மாடுகளல்ல அவர்கள் என்பதை இந்த மக்குகளுக்கு புரியாமலிருப்பது தான் இந்த நாட்டு அரசியல்வாதிகளுக்கு இருக்கும் மிகப் பெரிய மடத்தனம். இதற்கு மருந்து அங்கொட மனநோய் வைத்தியாசாலையிலும் இல்லை. அவர்களுக்கான மருந்து சிலவேளை பிரபாகரனுக்குத் தெரிந்திருக்கலாம். அப்படிக் கேட்க பிரபாகரனும் இல்லை. எனவே இந்த மக்குகளின் நோய்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் என தெரியாது அலைகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.