Header Ads



சாதனை படைத்தார் கேன் வில்லியம்சன்


டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் கேன் வில்லியம்சன்.


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் சதமடித்துள்ளார் வில்லியம்சன். இதையடுத்து 7787 ரன்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்பு 7683 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தா ராஸ் டெய்லர். அவரை விடவும் 35 இன்னிங்ஸ் குறைவாக விளையாடியுள்ளார் வில்லியம்சன். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சராசரி ரன்கள் (53.33) வைத்துள்ள நியூசிலாந்து வீரரும் வில்லியம்சன் தான். 


டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார் வில்லியம்சன். 20-க்கும் அதிகமான டெஸ்ட் சதங்கள் அடித்துள்ள ஒரே நியூசிலாந்து வீரர் என்கிற பெருமையயும் கொண்டுள்ளார். அவருக்கு அடுத்ததாக டெய்லர் 19 சதங்கள் எடுத்துள்ளார். மேலும் சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரரும் வில்லியம்சன் தான். 3930 ரன்கள். 

No comments

Powered by Blogger.