கஷ்டங்களைத் தாங்கினால், எதிர்காலத்தில் மகிழ்ச்சி
சிறிது காலம் துன்பப்பட்டால் நீண்ட காலம் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தக் கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு கடினமாக உழைத்தால் எதிர்காலத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என்றார்.
மின்கட்டணம் அதிகளவில் அதிகரிக்கும்போது மின் கட்டணத்தை செலுத்துவது கடினம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால் குறுகிய காலத்துக்கு இந்தச் சிரமங்கள் அனைத்தையும் தாங்கிக்கொள்ள வேண்டும் என எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.
Post a Comment