Header Ads



“மகிந்தவின் ஆசிர்வாதத்துடன் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஓர் அரசியல் முகவர் தான் சாணக்கியன்”


“மகிந்த ராஜபக்சவின் ஆசிர்வாதத்துடன் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஓர் அரசியல் முகவர் தான் சாணக்கியன்” என்று முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.


நேற்றை தினம் (06.02.2023) கொக்கட்டிச்சோலை மற்றும் முனைக்காட்டில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


மட்டக்களப்பு, மண்முனை தென்-மேற்கு பட்டிப்பளை பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழர் மகா சபையில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.


இக் கூட்டத்தில் அவர் கூறியதாவது,


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆசிர்வாதத்துடன் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஓர் அரசியல் முகவர் தான் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இக்கூட்டத்தின்போது, தமிழர் மகா சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்கால உள்ளுராட்சி வேலைத்திட்டங்கள் தொடர்பான தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.


இதன்போது, தமிழர் மகா சபையின் தலைவர் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன், முற்போக்கு தமிழர் அமைப்பின் செயலாளர் ரொஸ்மன் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. tw

No comments

Powered by Blogger.