Header Ads



கைவிடப்பட்டாரா மஹிந்த..?


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் சிலர், மஹிந்த ராஜபக்ஷவை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதற்கு காரணம் அந்த எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளனர்.


மஹிந்த ராஜபக்ச பிரதமராக இருந்தபோது, ​​பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் அவருடன் சாப்பிடுவதற்கு எம்.பி.க்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர், ஆனால் தற்போது அவர் பெரும்பாலும் தனியாகவே சாப்பிடுகிறார்.


அவர் பிரதமராக இருந்த காலத்தில், ​​பாராளுமன்றத்துக்கு வந்தபோது, ​​அவரை வரவேற்க ஏராளமான எம்.பி.க்கள் கூட்டம் நுழைவு வாசல் அருகே திரண்டிருந்த நிலையில், இன்று அவர் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரியுடன்தான் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைகிறார்.


அவருக்கு மிக நெருக்கமான இரண்டு அல்லது மூன்று எம்.பி.க்கள் மட்டுமே அவ்வப்போது அவருக்கு நெருக்கமாக இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.