Header Ads



புதிய சுற்றறிக்கையினால் உள்ளூராட்சித் தேர்தலுக்கு இடையூறா..?


மீண்டெழும் செலவுகளை 6 வீதத்தால் குறைத்து வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


தேர்தலுக்கான செலவை குறைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறினார்.


ஏதேனுமொரு வகையில் திறைசேரியிடமிருந்து கோரப்பட்டுள்ள நிதி கிடைக்காமல் போகும் பட்சத்தில், அது பிரச்சினையை ஏற்படுத்தும் என அவர் கூறினார். 


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த தொகையை வரவு செலவுத் திட்டத்தினூடாக விடுவிப்பதற்கு சமீபத்தில் பாராளுமன்றம் அனுமதி வழங்கியது. 


2023 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள மீண்டெழும் செலவுகளை 6 வீதத்தால் குறைத்தல் , அரசாங்க செலவுகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை, தேசிய கொள்கைகள் அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.