Header Ads



இலங்கையர்களின் மனிதாபிமானம்


பொறியில் இருந்த கோழிக்குடல்களை விழுங்கிய முதலை, அந்தப் பொறியில் இருந்த கேபில் கம்பி வாயில் சிக்கியதால் கடும் அவதிப்பட்ட நிலையில், களுத்துறை மக்கள் அதனை காப்பாற்றியுள்ளனர்.


மோட்டார் சைக்கிள் கம்பியே முதலையின் வாயில் சிக்கியிருந்ததுடன், அங்கிருந்த ஒருவர் முதலையின் வாயில் கைவிட்டு அதனை அப்புறப்படுத்தினார்.


களுத்துறை, கோனதூவ, கவடயா கொட பகுதியில் பொல்கொட ஆற்றின் கிளை ஓயாவில் அந்த பொறி யாரோ ஒருவரால் வைக்கப்பட்டிருந்தது.


வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வரும் வரை பொல்கொட நீர்த்தேக்கத்தில் அமைக்கப்பட்ட சிறிய நீர்த்தடாகத்தில் முதலையை வைத்திருக்க பிரதேச மக்கள் நடவடிக்கை எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.