ரணிலின் நரிக் குணத்தை மக்கள் நம்பக்கூடாது
தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு இன்று - 08- மட்டக்களப்பு கல்லடி தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. அதன் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் இந்த நரிகுணமான செயற்பாடுகளுக்கு மக்கள் இடம் அளிக்க வேண்டாம். ரணில் விக்ரமசிங்க, தற்போது நாட்டில் உள்ள நிலவரங்களை மூடி மறைத்து வேறு பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டு வந்து கலவரத்தை உண்டு பண்ணும் நோக்குடனே செயல்பட்டு வருகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்பு கோரியமை தொடர்பில் வினவிய போது, சில விடயங்கள் மன்னிக்க முடியும் சில விடயங்கள் மன்னிக்க முடியாது, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இரண்டு விடையங்கள் இருக்கின்றன. ஒன்று மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அசமந்த போக்கு, இரண்டாவது இன்று மைத்திரி பாலசிறிசேனவிற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எனப் பதிலளித்துள்ளார்.
ஆனால் இன்று மைத்திரி தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதாக தெரிவிக்கின்றார். ஆனால் அவர் செய்த செயலுக்கு நீதிமன்றம் சென்று அபராத வழக்கு தொடர வேண்டும். இந்த நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் முன்னிறுத்தியே கடந்து வந்த ஆட்சியாளர்கள் இந்த நாட்டை ஆண்டு வந்திருக்கின்றார்கள்.
ஒவ்வொரு ஆட்சியாளர்கள் வரும்போதும் ஒவ்வொரு இனவாதமும் மதவாதமும் இருந்திருக்கின்றது. கடந்த காலங்களில் யுத்தத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தார்கள் இன்று மதவாதத்தையும் இனவாதத்தையும் முன்னிறுத்தி அரசியல் செய்கின்றார்கள்.
ஆனால் எங்களது அரசாங்கம் ஒன்று வருமாக இருந்தால் நாங்கள் புரையோடிப் போய் கிடக்கின்ற தமிழர்களுக்காக புதியதொரு திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து அனைவருடைய ஒத்துழைப்புடன் அந்த சட்டத்தை நிறைவேற்றுவோம்.
இன்று 13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதாக கூறுகின்ற ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் 13வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட போது அவர்கள் கையொப்பமிடவில்லை.
அந்த நேரத்தில் பிரதமராக இருந்தவர் ரணில். ஆனால் தற்போது நாட்டில் ஒரு இனவாதத்தை தூண்டுவதற்காக இன்று 13வது திருத்த சட்டத்தை கையில் எடுத்து நரிக்குணத்தை ஆரம்பித்து இருக்கிறார். இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒருபோதும் செவிசாய்க்க கூடாது என கேட்டுக்கொள்கின்றேன்.
Post a Comment