Header Ads



பொய் சொல்லி தம்பட்டம் அடிக்கும், சோசலிவாதிகளின் பின்னால் ஏன் செல்லக் கூடாது..?


தற்போதைய அரசாங்கம் தவறான கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பதாகவும், இவர்களின் இத்தகைய செயற்பாடுகளினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ராஜபக்ச குடும்பம் இந்நாட்டை அழித்து வறிய நிலைக்கு இட்டுச் சென்றதாகவும்,சிறு குழந்தை முதல் முதியவர் வரை,அரச ஊழியர் முதல் கூலித் தொழிலாளி வரை அனைவரினதும் இயல்பு வாழ்க்கை வீழ்ந்துள்ளதாகவும், இந்நாட்டின் 220 இலட்சம் மக்கள் இனி எந்த ஆட்சியாளருக்கும்,தலைவருக்கும், அரசியல்வாதிகளுக்கும் அடிமைகள் அல்ல எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


ராஜபக்சவின் அடிமைத்தனத்தை இன்னமும் உறுதிப்படுத்தும் மொட்டு யானை அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான முதல் நடவடிக்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் ஆரம்பிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பாணந்துறையில் நேற்று (4) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.


உலகில் எந்த நாடும் பொருளாதாரத்தை சுருக்கி பிரச்சினைகளைத் தீர்த்ததாக இல்லை எனவும், தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கி நாட்டு மக்களை அழிக்க முயல்வதாகவும்,தேவையை குறைப்பதன் மூலம் நாட்டின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள் என்றாலும்,அது தவறு எனவும்,இந்த பொருளாதார மற்றும் சமூக வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதே ஒரே தீர்வு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


2019 இல் ஒரு தவறு செய்யப்பட்டதாகவும், 2023 இல் மக்கள் மற்றொருவருக்குப்   பின்னால் ஓடுவதாகவும்,இந்நாட்களில் பொய் சொல்லி தம்பட்டம் அடிக்கும் புரட்சியாளர்களுக்கு சர்வதேச ஆதரவு கிடைக்காது எனவும்,எமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் திறன் வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


வடகொரியா,கியூபா போன்ற சோசலிச நாடுகள் எமது நாட்டை கட்டியெழுப்ப உதவாது என்பதால் இதுபோன்ற சோசலிவாதிகளின் பின்னால் செல்ல வேண்டாம் எனவும்,இவ்வாறான சோசலிசவாதிகளின் பின்னால் செல்வதால் நாட்டை தற்போதைய நிலையில் இருந்து மேலும் வீழ்ச்சியடையச் செய்யும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.