அவுஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தனுஷ்க
டிண்டர் மூலம் தான் சந்தித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் ஜாமீன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இப்போது வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனுஷ்க குணதிலக்க கடந்த வருடம் நவம்பர் 2 ஆம் திகதி பாலியல் வன்கொடுமை சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள நிலையில் இன்று சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் .
தற்போது பிடரியில் இருக்கும் தனுஷ்கவுக்கு விதிக்கப்பட்டுள்ளகட்டுப்பாடுகளை தலைத்தக்கோரி அவர் தனது சட்டத்தரணி ஊடக விண்ணப்பித்திருந்தார்.
இதன் அடிப்படையில் குணதிலகவுக்கு WhatsApp ஐப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.எனினும் டேட்டிங்கை ஏற்பாடு செய்ய இந்த செயலி பயன்படுத்தப்படக் கூடாது என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. . டேட்டிங் ஆப்ஸ் அல்லது சமூக ஊடகங்கள் எதையும் பயன்படுத்த அவருக்கு இதுவரை அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .
தற்போது இரவில் வெளியே செல்லவும் அவருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
Post a Comment