தேர்தல் குறித்து மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“உள்ளாட்சித் தேர்தலை யார் ஒத்திவைக்கப் போகிறார்கள்? தேர்தல் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர் கூறினார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இரவு சாப்பாட்டு மேசையில் ரணிலும் மஹிந்தவும் கதைப்பதும் திட்டமிடுவதும் வேறு. அவை ஒருபோதும் வௌிவரமாட்டாது. காலையில் பத்திரிகைகளைச் சந்தித்த மஹிந்த தேர்தல் நடைபெறமாட்டாது என யார் கூறினாலும் பிழை. அது உரிய நேரத்துக்கு நடைபெற்றாக வேண்டும் என இந்த நாட்டு மக்களை வழமையாக வழிகெடுத்தும் பாணியில் உளர்த்துகின்றார். இவருடைய கிழட்டு மைனா வேடத்தை இந்த நாட்டிலுள்ள சிறுபிள்ளையும் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றது. அதனால் தான் அனைவரும் தேர்தல் நடைபெற்றாக வேண்டும் என மஹிந்தவுக்கும் அவருடைய கூட்டத்துக்கும் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுக்க பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ReplyDelete