Header Ads



அமெரிக்க அதிகாரிகள் இலங்கை புலனாய்வாளர்களின் ஆயுதங்கள் களைந்தனர் - வீரவன்ச


இலங்கைக்கு அண்மையில் பயணம் செய்த அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள், புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் இருந்தவர்களின் ஆயுதங்கள் களைந்த பின்னர், ஆயுதங்களுடன் அலுவலகத்துக்குள் பிரவேசித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பாராளுமன்றில் இன்று இந்த தகவலை வெளியிட்டார்.


இதன் மூலம் இலங்கையின் புலனாய்வுத்தரவுகள் அனைத்தும் அமெரிக்கப் புலனாய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்தே முடிவுகள் எடுக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக 2001 ஆம் ஆண்டு இவ்வாறான நிலைமை தோற்றுவிக்கப்பட்டபோதும், அது பின்னர் 2004ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.


அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களத்தின் இந்து பசுபிக் பாதுகாப்பு துணை உதவிச்செயலாளர் ஜெடிடியா ரோயல் தலைமையில், இலங்கைக்கு வந்தவர்களே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.


இந்தநிலையில் இவர்களின் இலங்கைக்கான பயண நோக்கம் என்ன? ஜனாதிபதியுடனும், பாதுகாப்பு செயலாளருடன் அவர்கள் எது குறித்து பேசினார்கள் என்ற விடயத்தை அரசாங்கம் பாராளுமன்றில் வெளிப்படுத்தவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

1 comment:

  1. ஆம் அது பெரிய பிரச்சினைதான். அப்படியானால் அதற்குத் தீர்வு என்ன? இருக்கவே இருக்கின்றது. இரவோடு இரவாக அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம் என மூன்று நேர புரியாணிக்கு ஏற்கனவே ஓடர் பண்ணி தமிலி குரும்ப, நீர், மற்றும் குளிர்பானங்களுக்கு ஏற்பாடு செய்துவிட்டு ஹெஞ்சய்யோக்களிடம் கூறினால் ஒரு மெத்தையையும் ஏனைய பொருட்களையும் ஏற்பாடு செய்வார்கள். போய் படுக்க வேண்டியதுதான். மூன்று நாளைக்குப்பிறகு பெரிய மச்சான் வந்து பாலைக் கொடுத்து பிரச்சினையை முடித்துவைப்பார். இனி அமெரிக்காவின் பிரச்சினை முடிந்துவிட்டது.

    ReplyDelete

Powered by Blogger.