Header Ads



சிவப்பு தம்பிமார்கள் போன்று சஜித், ராஜபக்சர்களுக்கு துணைபோவதில்லை



நாட்டை இவ்வளவு பாதாளத்திற்கு கொண்டு சென்றது ராஜபக்ச குடும்பவாதமே எனவும், இதற்காக, 2005 இல் ராஜபக்சர்களை ஆதரித்து வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டது, நாட்டுக்கு தீர்வு என கூறிக்கொண்டிருக்கும் சிவப்பு தம்பிமார்கள் தான் எனவும், நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கு அவர்கள் மகுடம் சூட்டினாலும் சஜித் பிரேமதாஸ ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபடவில்லை எனவும்,தாம் எப்போதும் பொது மக்களுடனே இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பல நூற்றாண்டுகளாக பெருமையுடன் அபிமானத்துடனும் வாழ்ந்து வந்த குடிமக்கள் இருந்த நம் நாட்டில் ராஜபக்சர்களின் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியினால் இந்த அபிமான தேசம் அழிந்ததாகவும், நண்பர் கூட்டம்,முதலாளித்துவ ராஜபக்ச குடும்ப வாதம், ஊழல்,இலஞ்சம் போன்றவற்றால் இந்நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தல் வெற்றியின் மூலம் எமது நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள்,செல்வங்கள் பணம் அனைத்தும் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு திருடர்களைப் பிடித்து வெளிப்படத்தன்மை வாய்ந்த அரச ஆட்சி  நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


போராட்டத்தின் மூலம் ராஜபக்சர்கள் விரட்டியடிக்கப்பட்டாலும், தற்போதைய ராஜபக்ச நிழல் அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமை கூட பல்வேறு சதிகளால் தடுத்துள்ளதாகவும், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க போதுமான பணம் உள்ளபோதிலும்,தேர்தல் செலவுக்கு மட்டும் பணம் இல்லை எனக் கூறுவது நகைப்புக்குரியது எனவும், தேர்தலை நடத்தாவிட்டால் ஜனநாயக ரீதியிலும் அமைதியான போராட்டத்தின் மூலமும் தேர்தலை எவ்வாறேனும் பெறுவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


தெஹியோவிட்ட பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.