மனைவி சமைத்த உணவை அதிகம் உட்கொண்டு, நாட்டு மக்களின் பணத்தை நான் சேமித்தேன்
களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார் .
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட செலவினத்துடன் ஒப்பிடுகையில் தாம் அதிகமாக செலவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது . தாம் ஜனாதிபதியாக கடமையாற்றிய காலப்பகுதியில் வேலைப்பளு அதிகமானதால் நாடாளுமன்றில் சில சந்தர்ப்பங்களில் உணவு உட்கொண்டுள்ளேன் .
ஏனைய அனைத்து சந்தரப்பங்களிலும் , தனது மனைவி சமைத்த உணவையே உட்கொண்டுள்ளேன் . இவ்வாறே நான் நாட்டு மக்களின் பணத்தை சேமித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் .
தாம் ஒருபோதும் வீண் செலவீனம் செய்யவில்லை என்பதற்கு இதுவே உதாரணமாகும் என அவர் மேலும் தெரிவித்தார் . அவ்வாறே இலங்கை ஜனாநாயகத்திற்கான சுபீட்சமான யுகம் தனது ஆட்சியின் போதே காணப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார் .
யாருக்கும் மதுபான விற்பனை லைஸன்ஸ் கொடுக்க வேண்டாம் என நிதிஅமைச்சுக்கு கட்டளையிறப்பித்துவிட்டு வலது பக்கத்தில் உள்ள உமது மகள் எத்தனை மதுபான கடை லைஸன்ஸ்களை பெற்றுக் கொண்டாள் என்பது பொலனருவ மட்டுமல்ல கொழும்பில் உள்ள அத்தனை கட்சிக்காரருக்கும் தெரியும். சொகுசு கார் இறக்குமதி வரி 250 வீதத்துக்கு மேல் விதித்து விட்டு நீர் எத்தனை சொகுசுக் கார்களை இறக்குமதி செய்து வௌியில் விற்று கோடான கோடி டொலர்கள் சம்பாதித்துள்ளார் என்பது அத்தனை கட்சிக்காரருக்கும் தெரியும். மரணதண்டனை அனுவித்துக் கொண்டிருந்த சிறைக்ைகதியை விடுவிக்க பாராளுமன்றத்தில் உள்ள துவேச கள்ளச்சாமியுடன் சேர்ந்து எத்தனை கோடி இலஞ்சம் பெற்றுக் கொண்டு அவனை விடுவித்து வௌிநாட்டுக்கு அனுப்பிவைத்த கதையும் எல்லா கட்சிக்காரனும் அறிந்துவைத்திருக்கின்றார்கள். எனவே ராஜபக்ஸவுடன் சேர்ந்து நீரும் நன்றாக புளுகவும் பொதுமக்களை ஏமாற்றவும் கற்றுக் கொண்டு இருப்பதும் அனைவருக்கும் தெரியும் . எனவே எந்த தேர்தல் வந்தாலும் உமக்கு எந்த வாக்குகளும் கிடைக்காது என்பதற்கு பொதுமக்களே சாட்சி என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளும்.
ReplyDelete