அமைதியாக வாழ விரும்பியவருக்கு, மிகப்பெரிய தொந்தரவாக மாறிய வீடு
இந்த நிலையில், அவர் தங்குவதற்கு கொழும்பு பௌத்தாலோக மாவத்தை பிரதான வீதிக்கு முகமாக நிர்மாணிக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.
அது கோட்டாபயவின் மிரிஹானையில் உள்ள தனியார் இல்லத்தின் பாதுகாப்பு நிலைமை போதுமானதாக இல்லை என பாதுகாப்பு தரப்பினர் அப்போது வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் பௌத்தாலோக மாவத்தையில் உள்ள வீடு வழங்கப்பட்டது.
அதற்கமைய, கோட்டாபய இலங்கைக்கு வந்த நாள் முதல் பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள இந்த வீட்டில் வசித்து வந்தார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, தொடர்ந்து வாகனங்களின் சத்தமும், ஹோர்ன்களின் சத்தமும் கோட்டாபயவுக்கு இந்த வீட்டில் வசிப்பது பெரும் பிரச்சினையாக மாறியது.
அமைதியான வாழ்க்கை வாழ விரும்பிய கோட்டாபயவுக்கு அந்த வீடு மிகப்பெரிய தொந்தரவாக மாறியது என தெரியவந்துள்ளது.
இதன்காரணமாக இந்த உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பதிலாக, வேறு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குமாறு கோட்டாபய அதிகாரிகளுக்கு பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த வசித்த விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், மகிந்த அங்கு சென்ற பின்னர், அதுவரை அவர் தங்கியிருந்த புல்லர்ஸ் வீதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் செல்ல கோட்டாபய திட்டமிட்டிருந்தார்.
ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த உத்தியோகபூர்வ இல்லம் அவருக்கு கிடைக்கவில்லை. அந்த நிலையில் கடந்த வாரம் கோட்டாபய விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளார்.
அவருக்குப் பழக்கமான மிரிஹான இல்லத்திற்குச் செல்வதற்கு அவர் முடிவெடுத்துள்ளார். அதற்கமைய, கோட்டாபய தற்போது மிரிஹானையில் அமைதியான சூழலில் அமைந்துள்ள தனது தனிப்பட்ட வீட்டில் வசித்து வர முடிவு செய்துள்ளார்.
எனினும் தற்போது 10 நாட்கள் விஜயமாக அவர் வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. TW
Post a Comment