தேர்தலை ஒத்திவைத்து ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார், தண்டனை நிச்சயம் என்கிறார் சஜித்
இந்த சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு முரணான தேர்தல்களை தடுத்து நிறுத்தும் சதியை மக்கள் ஆணை,மக்கள் சக்தியுடன் முறியடித்து,இந்த சதியில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அதேபோல்,இத்தேர்தலில்,மக்கள் மாற்று அணியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, இரண்டாவது தடவையாகவும் வங்குரோந்து நிலையை உருவாக்குவதாக அத்தெரிவு அமையாதிருக்க வேண்டும் எனவும்,தற்போதைய வங்குரோத்து நிலையிலிருந்தும் கோட்டாபய ராஜபக்ச ஏற்படுத்திய குழப்பத்திலிருந்தும் விடுபட மாற்று அணி தீர்வு என்ற பெயரில் மீண்டும் முன்வந்துள்ளதாகவும், இந்நேரத்தில் நாட்டுக்கு டொலர்களை பெறும் திறமையான குழுவே தேவைப்பாடாக இருப்பதால் மக்கள் சரியான முடிவை எடுக்காவிட்டால் நாடு மேலும் அழிந்துவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு ராஜபக்சர்களே என அவர்களை ஆட்சிக்கு கொண்டு வந்தது ஐக்கிய மக்கள் சக்தி அல்ல எனவும் மக்கள் விடுதலை முன்னணியே அவர்களை ஆட்சியில் அமர்த்தியதாகவும், இவ்வாறான திருடர்களிடம் சிக்காமல், எவ்வாறேனும் தேர்தலை நடத்தி நாட்டை திருடிய திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்த ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்யுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment