நாட்டின் பொருளாதாரமும், சட்டத்தின் ஆதிபத்தியமும் முறிந்து விழுந்து போனதை கொண்டாட வேண்டுமா..?
நாடு இக்கட்டான நிலையில் உள்ள இந்த தருணத்தில் அதிக பணத்தை செலவழித்து சுதந்திர தின நிகழ்வுகளை நடத்துவது குறித்து இலங்கை கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்பியுள்ளது.
இன்று(01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அருட்தந்தை சிறில் காமினி இந்த விடயத்தை தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆதிபத்தியம் முறிந்து விழுந்து போன தருணத்தை கொண்டாடுவதற்கு என்ன காரணம்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சுதந்திர தினத்தை அதிக பணம் செலவழித்து கொண்டாடுவதற்கு திருச்சபை எதிர்ப்பு வெளியிடுவதுடன், அவ்வாறான நிகழ்வுகளில் தமது பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment