Header Ads



இலங்கையில் Bitcoin க்கு கதவடைப்பு - உலக கோடீஸ்வரரின் யோசனையை நிராகரித்த மத்திய வங்கி


கோடீஸ்வர முதலீட்டாளரான ரிம் ட்ரேப்பர் (Tim Draper)முன்வைத்த Bitcoin (டிஜிட்டல் பணம்) யோசனையை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நிராகரித்துள்ளார்.


இலங்கையில் Bitcoin பயன்பாட்டை அங்கீகரிப்பது தொடர்பில் ரிம் ட்ரேப்பர் முன்வைத்த யோசனையையே அவர் இவ்வாறு நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இது முழுமையாக (100%) சாத்தியமற்றது எனவும், பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமடையச் செய்யும் வாய்ப்பு காணப்படுவதால் அதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.


எனவே அவ்வாறான வழிகளை பின்பற்றுவது தொடர்பில் மத்திய வங்கி எவ்வித தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Bitcoin எனப்படுவது கிரிப்டோ நாணயம் என்பதோடு, பௌதிக ரீதியான வழக்கமான நாணயம் அல்ல. இது புளொக் செயின் அடிப்படையில் அதன் பயணத்தை அடையாளம் காணும் வகையில் அதன் ஆரம்பம் முதல் இறுதி வரையான பயணத்தை தெளிவாக காண்பிக்கும் பண பரிமாற்ற முறையாகும்.


ரிம் ட்ரேப்பர்,  Draper Startup House ஊடாக ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட உதவிகளை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. வௌிநாடுகளிலிருந்து அங்கு கடுமையாக உழைக்கும் மக்கள் அனுப்பும் டொலர்களையும் வேறு வௌிநாட்டு நாணயங்களையும் வைத்து மிக சூட்சுமமாக நாள்தோறும் பல இலட்சம் டொலர்களைச் சம்பாதித்து தங்கள் பொக்கட்களில் போட்டுக் கொண்டு மக்களுக்குச் சேவை செய்வதாக நடிக்கும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள், இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் பெரிதாக எதையும் செய்வதில்லை. அவர்களின் பணத்தில் கொள்ளையடிக்கும் தந்திரத்தை மாத்திரம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கின்றனர் என அந்த மட்டத்தில் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் பிட்கொயின் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாதிப்பாக அமையும் என்றால் அதன் பொருள் அந்த வியாபாரம் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டால் எங்களுக்கு அதனால் வாசி, இலாபம் ஒன்றுமில்லை என்பது தான். பொதுமக்கள் அரைவயிறு கால்வயிறு வெறும் பட்டினியில் வாழும் போது அவர்களின் சொச்சங்களைச் சேர்த்து வரி, வட்டி என்ற பெயரில் சுரண்டப்பட்டு அவை மூலம் அரசாங்க உயர் அதிகாரிகளின் சுகபோகத்துக்குப் பயன்படுத்தப்பட்டு மென் மேலும் அவர்களைச் சூறையாட உபயோகிக்கப்படுகின்றது. இது போன்றதொரு நாடு உலகில் நிச்சியம் இருக்க முடியாது என்பதை மாத்திரம் நாம் உறுதியாகக் கூறலாம்.

    ReplyDelete

Powered by Blogger.