ATM இயந்திரத்தை தூக்கிச் சென்றவர்கள் கைது - அலி சப்ரியின் வீட்டில் திருடிய துப்பாக்கியும் மீட்பு
கம்பளை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தை திருடிய 07 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து ஏடிஎம் இயந்திரம் மற்றும் துப்பாக்கியையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
குறித்த துப்பாக்கி கடந்த வருடம் இடம்பெற்ற போராட்டத்தின் போது தீயிட்டு கொளுத்தப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வீட்டில் இருந்து திருடப்பட்ட துப்பாக்கி என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment