Header Ads



ATM முன் நின்றபடி, அடம்பிடித்த பெண்


மேல் மாகாணத்தில் உள்ள பணப்பரிவர்த்தனை இயந்திரத்தில் கட்டணம் செலுத்த வேண்டிய தொகையை விடவும் அதிக பணத்தை இயந்திரத்திற்குள் வைத்த பெண் ஒருவர் அதன் மீதிப்பணம் வெளியே வரும் வரை பல மணித்தியாலங்கள் குழப்பம் ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


அவசரமாக ஓடி வந்த இளம்பெண் ஒருவர் வங்கியின் பணப்பரிவர்த்தனை இயந்திரத்திற்குச் சென்று, குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றில் பெற்ற பட்டியலை பார்த்து, பணம் மாற்றும் பொத்தான்களை இயக்கி, நாணயத்தாள்களை செருகியுள்ளார்.


இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் முடித்த பின்னர், அந்த இளம்பெண்ணுக்கு இயந்திரம் மூலம் இ-டிக்கெட்டும் வழங்கப்பட்டது. அதை எடுத்த இளம்பெண் இயந்திரத்தை விட்டு வெளியேறாமல் இயந்திரத்தை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்ததால், வரிசையில் நின்றிருந்தவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.


1200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியதற்கு 5000 ரூபாய் நாணயத்தாளை இயந்திரத்தில் செருகி விட்டமையால் மீதி பணத்திற்காக காத்திருந்தார்.


மீதி பணம் வந்த பின்னரே செல்வேன் என கூறி இயந்திரத்தை விட்டு நகராமல் இருந்துள்ளார். அதன் பின்னர் அங்கு நீண்ட நேரம் காத்திருந்த இளைஞன் சம்பவத்தை தெளிவுப்படுத்தி வங்கி கிளையில் பணம் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.


எனினும் அன்றைய தினம் வங்கிக்கு விடுமுறை என்பதால் பணம் பெறாமல் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலைமை அந்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது.  TW

No comments

Powered by Blogger.