Header Ads



துருக்கியில் மீட்புப் பணிகளுக்கு, ஆதரவளிக்க இலங்கை தீர்மானம் - பாதிக்கப்பட்ட இடத்தில் 9 இலங்கையர்கள்


துருக்கியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்கள் தொடர்பான மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க இலங்கை முடிவு செய்துள்ளது.


துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் குறித்த 9 பேரில் 8 பேர்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.


எனினும், இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் வசித்த 9 ஆவது நபர் சம்பவம் இடம்பெற்ற போது அங்கு இருக்கவில்லை என்று கூறப்படுகின்றது.


மேலும் அவர் தொடர்பில் இதுவரை தொடர்பு கொள்ளப்படவில்லை என துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.