ராஜபக்சாக்களுக்கான ஆதரவு எத்தனை வீதம் சரிந்துவிட்டது தெரியுமா..? இனி 69 இலட்சம் கதை செல்லாது
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கருத்துப்படி, ராஜபக்சாக்களுக்கான மக்கள் ஆதரவு 8% ஆகக் குறைந்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
எனவே 69 இலட்சம் என்ற கதை மேலும் செல்லாது என அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்த நாட்டின் 92 வீதமான மக்கள் ராஜபக்சவின் வாழ்வை அழிக்க நினைப்பவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச சாபம் இங்கிருந்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment