Header Ads



77 கோடி ரூபா கோரி அனுப்பிய கடிதத்திற்கு, நிதி அமைச்சிடமிருந்து இதுவரை பதில் இல்லை


உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு அவசியமான ஒதுக்கத்தை கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.


நிதியமைச்சின் பதிலுக்காக தொடர்ந்தும் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


தேர்தல் வாக்களிப்புக்கான முதல் கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கு அவசியமான 77 கோடி ரூபா கோரி தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் நிதியமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.