Header Ads



76 இலட்சம் ரூபா பணத்தை திருடிவிட்டு, இயந்திரந்தை பள்ளத்தில் வீசிச்சென்ற 7 பேர் கைது


கம்பளை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியொன்றில் ATM இயந்திரத்தை பணத்துடன் திருடிய 7 சந்தேக நபர்களில் நால்வர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அவர்களில் இருவர் இரட்டைச் சகோதரர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.


இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய 07 சந்தேகநபர்கள் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


கம்பளை பிரதேசத்தில் இரண்டு சந்தேகநபர்களும், கலஹா பிரதேசத்தில் மூன்று சந்தேகநபர்களும், புத்தளம் பிரதேசத்தில் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவத்துடன் 6 சந்தேகநபர்கள் நேரடியாக தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவதுடன் மற்றைய சந்தேக நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர்கள் அனைவரும் 24 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.


சந்தேகநபர்கள் வாடகைக்கு வேன் ஒன்றை எடுத்து கம்பளை பிரதேசத்திற்கு வந்து தனியார் வங்கியொன்றில் இருந்து இந்த ATM இயந்திரத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.


குறித்த ATM இயந்திரத்தில் இருந்த 76 இலட்சம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு ATM இயந்திரத்தை பள்ளத்தில் வீசிச் சென்றுள்ளனர்.


குறித்த ATM இயந்திரத்தையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், சந்தேகநபர்கள் வசம் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கடந்த மே மாதம் 09 ஆம் திகதி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட போது, ​​திருடப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கான 10 தோட்டாக்களே சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


கொள்ளையிடப்பட்ட பணத்தில் இருந்து 18 இலட்சத்து 70,000 ரூபா பணத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.


சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்பு காவல் உத்தவை பெற்று மேலதிக விசாரணைகள் நடாத்தப்படவுள்ளன.

No comments

Powered by Blogger.