Header Ads



தென் கொரியாவில் 6,500 தொழில் வாய்ப்புகள் - மொழித் தேர்விற்கு விண்ணப்பங்கள் கோரல்


கொரிய வேலைவாய்ப்பிற்கான மொழித் தேர்விற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


அதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க முடியும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.


சுமார் 6,500 தொழில் வாய்ப்புகளுக்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதும் எதிர்வரும் மார்ச் மாதமளவில் கொரிய மொழி பரீட்சை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.


கொரியாவில் உற்பத்தி மற்றும் கடற்றொழில் துறையில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த போட்டிப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk ஊடாக கொரிய மொழி பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியுமென அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.