6.3 பில்லியன் ரூபாவை மொத்த இலாபமாக ஈட்டி, சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட்
இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பு ஒன்றினை தயாரிப்பதற்காக விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது . 10 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது .
இந்த குழுவின் தலைவராக நீதியரசர் கே.டி.சித்ரசிறி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை , ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் 6.3 பில்லியன் ரூபாவை மொத்த இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதுவே இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் வருடாந்த இலாபத்தில் ஈட்டப்பட்ட அதிகமான தொகை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment