ஜனாதிபதி அலுவலகம் என்ற பெயரில், பதிவு செய்யப்பட்ட 56 வாகனங்களை காணவில்லை
ஜனாதிபதியின் செலவீனங்கள் தொடர்பாக, 2021 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது மேலும், இந்த வாகனங்களின் கிரய இருப்பு சரிபார்க்கப்படவில்லை என்பதும் கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
அலுவலகத்தில் இல்லாத வாகனங்கள் தொடர்பாக முறையான சோதனை நடத்தப்பட்டதை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் கணக்காய்வுக்காக சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அந்த கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகைகள் மற்றும் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவுகளின் முகவரிகளில் 45 வாகனங்கள் வேறு தனிப்பட்ட பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், ஜனாதிபதி செயலகத்தின் வாகன பாவனை தொடர்பில் ஒழுங்கான முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டுமென கணக்காய்வு அறிக்கை ஊடாக பரிந்துரைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான தகவல்கள் வரவழைக்கப்பட்டு பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளருடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் பிரதான கணக்காய்வு அதிகாரி கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். TL
Post a Comment