ஜெனிவா மனித உரிமைகள் 52 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம், இலங்கை பற்றியும் கலந்துரையாடல்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டமும் அன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
மார்ச் மாதம் 8 ஆம் திகதியும் 9 ஆம் திகதியும் இலங்கை தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
சட்ட மா அதிபர் திணைக்களம், வௌிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளது.
வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அலி சப்ரி இலங்கை சார்பில் பங்குகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment