50 சதவீதமான அரசியல்வாதிகள் மோசடிக்காரர்கள்- பொன்சேக்கா
- Ismathul Rahuman -
இந்த நாட்டில் கட்சி, நிற பேதமின்றி 50 வீதமான அரசியல்வாதிகள் மோசடிக்காரர்கள். மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேக்கா, கட்டான பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் அபேட்சகர்களுக்கு ஆதரவாக பேஷகர்மான்தகமவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
75 வருடங்களாக நாடு பின் நோக்கிச் சென்றுள்ளமை பொய் என்று யாருக்கும் சொல்லமுடியாது. இந்த நிலமைக்கு உள்ளுராட்சிமன்ற, மாகாணசபை, பாராளுமன்ற அரசியல்வாதிகள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும்.
மூன்று தரங்களில் அரசியல்வாதிகள் உள்ளனர். 50 சதவீதமானவர்கள் கட்சி, நிற வேறுபாடின்றி அதி மோசடி, ஊழல்வாதிகள். அவர்களுக்கு உங்கள் உயிர் தொடர்பாகவோ,பிரச்சிணைகள் தொடர்பாகவோ அக்கரையில்லை.சூழலை மாசுபடுத்தும் மணல் அகல்வதிலும், மரங்களை வெட்டுவதிலும், கல்உடைத்து பொரல் அகழ்வதிலும், மாதுபான நிலயங்களை திறப்பதிலுமே ஈடுபடுகின்றனர். கோடிக்கணக்கில் சம்பாதிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். நாட்டைப் பற்றி அக்கரையில்லை.
35 சதவீதமானவர்கள் களவெடுப்பதில்லை. ஆனாலும் அவர்களால் நாட்டிற்கு எந்தப் பயனுமில்லை. 15 சதவீதமானவர்களே உன்மையான நாட்டுப்பற்றுள்ள,நேர்மையான, உயிர்துடிப்புள்ள, வேலைசெய்யக்கூடிய சிறந்தவர்கள் உள்ளனர்.
வெளிநாடுகளில் மூன்றாவது பிரிவினர் நூறு வீதமாக உள்ளனர். அதனால்தான் அந்த நாடுகள் முன்னேற்றமடைகின்றன.
எனவே நீங்கள் வாக்களிக்கும் வேற்பாளர்கள் தொடர்பாக சிந்தியுங்கள். வாக்களிக்கமுன் அவர்கள் தொடர்பாக தேடிப்பாருங்கள். நாட்டிற்கு பயனுள்ள ஆற்றலுள்ளவர்களை தெரிவுசெய்யுங்கள்.
எமது நாட்டில் 70 சதவீதமானவர்கள் வறுமை நிலையில் உள்ளனர். சொன்னதை செய்தவர்கள் யார் என்று பாருங்கள்.மேடைகளில் பேசும் அழகான வார்த்தைகளுக்கு ஏமாறவேண்டாம் எனக் கூறினார்.
Post a Comment