துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் மரணித்தோர் 5000 ஆக உயர்வு - பேரழிவினை உணர்த்திய பறவைகள் கூட்டம்
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மேலும் பலரைக் கண்டறிவதால், உயிரிழப்பு எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
அனர்த்த வலயத்தில் உள்ள பலர் கட்டடங்களுக்கு திரும்புவதற்கு மிகவும் அச்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் மழை மற்றும் பனியுடன் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துருக்கி நாட்டில் திங்கட்கிழமை அதிகாலையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய இயற்கை பேரழிவினை பறவைகள் கூட்டம் முன்னதாகவே உணர்த்தியுள்ளன.
பொதுவாக மிகப்பெரிய துயரம் ஏற்படும் முன்பாக அதை இயற்கையானது உணர்த்தும். பறவைகள், விலங்குகளுக்கு இயற்கை பேரிடர் முன்கூட்டியே தெரியவரும்.
இந்நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலநடுக்கம் ஏற்படும் முன்னர் பறவைகள் காசியான்டேப் சுற்றி வட்டமடித்துள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. நிலநடுக்கத்தை உணர்த்தவே பறவைகள் அவ்வாறு பறந்து திரிந்ததாக சமூக வலைதளத்தில் பலரும் கருத்து பதிவிட்டனர்.
Post a Comment