Header Ads



4 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு


4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை வியாழக்கிழமை (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச அறிவித்தது.


அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு நேற்று முதல் அமுலுக்கு வருகிறது என்றும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.


ஒரு கிலோகிராம் கடலை பருப்பு 5 ரூபாயினால் குறைக்கப்பட்டு 305 ரூபாயாகவும்,  ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 164 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளன.


மேலும், ஒரு கிலோகிராம்  பச்சை அரிசி 5 ரூபாய் குறைக்கப்பட்டு 179 ரூபாயாகவும்  ஒரு கிலோகிராம் உள்ளூர் வெள்ளை நாட்டு அரிசி 4 ரூபாய் குறைக்கப்பட்டு 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.