48 கோடி ரூபாய், பெறுமதியான சிகரெட்டுகள் சிக்கின
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 48.7 கோடி ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருவாய் கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள், புதன்கிழமை (22) கைப்பற்றியுள்ளனர்.
டுபாயில் இருந்து வந்த 20 அடி கொள்கலனில் சட்டவிரோத சிகரெட்டுகள் இருந்தமை சோதனையின் போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரத்து 250 கிலோ கிராம் நிறையுடைய 1,294 சுருள்கள் அச்சிடப்பட்ட ரேயான் துணிகள் கொள்கனில் இருப்பதாக சுங்கப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சுங்க அதிகாரிகள் கைப்பற்றும் போது அவர்களுக்கு அதில் பெருமளவு கமிசனாகச் செல்லுகின்றது. இப்போது நிதி உதவி அமைச்சருக்கும் அதில் சரியான பங்கு கிடைக்கின்றது. எப்படி ரணிலின் ஆட்சி. ஒவ்வொரு மந்தி(ரி)களும் கமிசனுக்காக அரச அதிகாரிகளின் பின்னால் அலைந்து திரிகின்றன.
ReplyDelete