ஜப்பான் வழங்கிய 46 மில்லியன் டொலர்கள் நன்கொடை
நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம், கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன மற்றும் ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (Mizukoshi Hideaki) ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம் ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 20 மில்லியன் லீற்றர் டீசலை வழங்கவுள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் இலங்கையில் மருத்துவ சேவைகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்த மனிதாபிமான உதவி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
22.02.2023
மருத்துவமனைகளுக்கு டீசல் எவ்வளவு அவசியமானது என்பதை ஜப்பான் சரியாக புரிந்திருக்கின்றது. ஆபத்தில் இருக்கும் ஒரு நோயாளியைக் காப்பாற்ற அடுத்த வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க அம்புலன்ஸ்க்கு டீசல் இல்லை என்றால் அதைவிடப் பெரிய பாவம் ஒன்றுமில்லை என்பதை சரியாக இனம் கண்டு ஜப்பான் இந்த தருணத்தில் இலங்கைக்கு உதவியிருக்கின்றது. அது போல் முக்கியமான நாடுகள், நிதி நிறுவனங்களும் இலங்கைக்கு ஒரு சதத்தையேனும் கொடுக்காமல் தேவையான பொருட்களை அவர்களின் கண்காணிப்பின் கீழ் வழங்கினால் ஊழலை ஓரளவுக்கு குறைக்கலாம். ராஜபக்ஸயின் கள்ளக்கூட்டம் இன்னும் தொடர்ந்து அரசாங்கத்திலும் ஏனைய நிறுவனங்களிலும் இருக்கும் வரை இலங்கைக்கு எந்த நாடும் நாணயமாகக் கொடுக்கக்கூடாது. ஏனெனில் இதுவரை பெற்ற கடன்கள் அனைத்தும் அல்லது அவற்றில் பெரும்பகுதி கள்ளன்களின் வங்கிக்கணக்குத்தான் சென்றிருக்கின்றது. அந்த அநியாயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
ReplyDeleteகோட்டுக்கும் சூட்டுக்கும் குறைவில்லை. வாங்குவது பிச்சை. ஆனால் காட்டுவது லெவல்.
ReplyDelete