Header Ads



பின்னுக்கு தள்ளப்படும் முதற்தர பணக்காரர்கள் - 43 நாட்களில் 83 பில்லியன் டாலர் இழப்பு


இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களாக அறியப்படும் முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானியும் நடப்பு 2023-ம் ஆண்டில் இதுவரையில் (பிப்.23) சுமார் 83 பில்லியன் டாலர்களை தங்கள் சொத்து மதிப்பில் இருந்து இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இருவரும் சொத்துகளை இழந்தவர்களில் முதல் வரிசையில் இடம்பிடித்துள்ளதாக தகவல்.


கெளதம் அதானி: துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கெளதம் அதானி. 60 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாகவே உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அவர் அண்மையில் அதில் பின்னடவை சந்தித்தார்.


தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு 42.7 பில்லியன் டாலர்கள் என தெரிகிறது. கடந்த ஜனவரி இறுதி முதல் தனது சொத்து மதிப்பில் சுமார் 64 சதவீதத்தை அவர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பில் சுமார் 78 பில்லியன் டாலர்களை அவர் இதுவரையில் இழந்துள்ளார்.


அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டது. அதன் பின்னர் இந்த சரிவை அவர் எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


முகேஷ் அம்பானி: பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் மற்றும் எரிவாயு, டெலிகாம் மற்றும் ரீடெயில் மாதிரியான தொழில்களில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் குழுமத் தலைவராக முகேஷ் அம்பானி உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 81.5 பில்லியன் டாலர்களாகும். இவரது சொத்து மதிப்பில் 5 பில்லியன் டாலர்களை நடப்பு ஆண்டில் இழந்துள்ளதாக தகவல். உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது அவர் 12-வது இடத்தில் உள்ளார்.

1 comment:

  1. இந்தியாவை ஆசியாவின் அசிங்கம் என்று கூற காரணம். இந்த விபச்சார நாடு எல்லா விடயங்களிலும் திருட்டு தனத்தை மாத்திரமே முதலீடாக கொண்டுள்ளது. இவர்களின் கபட தனத்தை மேற்குலக நாடுகள் உணர்ந்துவிட்டன கொலைகார பொறுக்கி கிழட்டு மோடியை கொண்டே அந்த நாட்டை துண்டு துண்டாக உடைப்பர்கள். இது நிச்சயம் நடக்கும்

    ReplyDelete

Powered by Blogger.