ஊர்காவற்றுறையில் இன்று 3 சடலங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதேசத்தில் இன்று -25- இருவேறு இடங்களிலிருந்து மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வயோதிபச் சகோதரிகள் இருவர் எரிந்த நிலையில் இன்று முற்பகல் அவர்களது வீட்டுக்காணி ஒன்றிலிருந்து சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் ஆலயத்தை அண்மித்த பகுதியான சென் மேரிஸ் வீதியைச் சேர்ந்த மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா ஆகிய இருவரும் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை,ஊர்காவற்றுறை அக்கா தங்கை குளத்தில் ஆணொருவரின் சடலம் இனம் காணப்பட்டுள்ளளது.
ஊர்காவற்றுறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருடன் அவர் பயணித்த மிதி வண்டியும் குளத்தினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
Post a Comment