Header Ads



விண்வெளியி சிக்கிய 3 வீரர்களை பூமிக்கு கொண்டு வர மாற்று விண்கலத்தை ஏவியது நாசா!!


விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக விண்வெளி ஆய்வு நிலையத்தில் சிக்கியுள்ள 3 வீரர்கள் பூமிக்கு திரும்பும் வகையில் மாற்று விண்கலத்தை நாசா ஏவியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசாவும் ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். 


அதன்படி கடந்த ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் MS-22 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்க விண்வெளி வீரர் Francisco Rubio, ரஷ்ய விண்வெளி வீரர்கள் Sergey Prokopyev, Dmitry Petelin ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் டிசம்பர் 14ம் தேதி திடீரென விண்கலத்தின் கூலண்ட் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது.


கசிவு ஏற்பட்டதை அடுத்து வீரர்களின் விண்வெளி நடைபயணம் ரத்து செய்யப்பட்டது. விண்கல் ஒன்று மோதியதால் பழுது ஏற்பட்டு இருக்கலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. 


இந்த நிலையில் விண்வெளியில் சிக்கியுள்ள 3 வீரர்களை பூமிக்கு அழைத்து சோயுஸ் MS-23 என்ற மாற்று விண்கலத்தை நாசா செலுத்தியுள்ளது. கஜகஸ்தானில் உள்ள Baikonur Cosmodrome ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சோயுஸ் MS-23 என்ற ஆளில்லா விண்கலத்தை நாசா ஏவியுள்ளது. 


ஞாயிறன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்று அடையும் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.