Header Ads



ரணிலுக்கு 3 வருடங்கள் சிறைத் தண்டனை


தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவித்தமைக்காக ஜனாதிபதி எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.


மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.


நீதிமன்றம் தேர்தல் தொடர்பான உத்தரவை பிறப்பிக்கும் முன்னரே தேர்தலை நடத்தப்போவதில்லை என அறிவித்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.


இதற்கு எதிராக இன்று முதல் மக்கள் படையொன்று அழைக்கப்படும். தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் நீதிமன்றில் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேளையில், தீர்மானத்தை வழங்குவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்தமை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.


தேர்தலுக்கு பயந்துதான் ஜனாதிபதி இவ்வாறு கூறுகின்றார் என்றும் பணப்பிரச்சினை இல்லை என்பதற்காக அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  Twin

No comments

Powered by Blogger.