Header Ads



தேர்தல் திகதி மார்ச் 3 அறிவிக்கப்படும்


உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்த முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 


தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் மார்ச் மாதம் 03 ஆம் திகதி அறிவிக்கப்படுமெனவும் ஆணைக்குழு கூறியுள்ளது.


இன்று (24) நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அரசியலமைப்பு ரீதியாக தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையுடன், திறைசேரியிடமிருந்து தேவையான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில், சபாநாயகரிடம் அறிக்கையிடவுள்ளதாக ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.


No comments

Powered by Blogger.