Header Ads



விரைவில் அமைச்சரவை மாற்றம், சிலர் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள், வெற்றிகரமாக செயற்பட்ட 3 அமைச்சுக்கள்


ஒரு பில்லியன் டொலர் கடன் பெறுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக Bloomberg இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.


சர்வதேச நாணய நிதியத்திடம் சாதகமான பதில் கிடைத்தவுடன் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், அமைச்சுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அறிக்கை கோரியுள்ளதோடு அதில் எரிசக்தி, பொலிஸ் மற்றும் வர்த்தக அமைச்சுகள் ஆகிய மூன்று அமைச்சர்களே வெற்றிகரமாக செயற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட தற்போதைய அமைச்சரவையை மாற்றுமாறு ஜனாதிபதிக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அமைப்புகள் கோரியுள்ளன.


இந்த நிலையில் விளையாட்டு, நெடுஞ்சாலைகள், போக்குவரத்து , வெகுஜன ஊடகத்துறை , துறைமுகம், தொழில் அமைச்சு என்பன அமைச்சரவை மாற்றத்தின் போது மாற்றப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. எரிசக்தி, பொலிஸ் மற்றும் வர்த்தக அமைச்சுகள் ஆகிய மூன்று அமைச்சர்களே வெற்றிகரமாக செயற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் யூஎன்பீயின் திறைசேரியை நிரப்புவதற்கான இலக்குகள் இந்த மூன்று அமைச்சுக்களும் சிறப்பாக நிறைவேற்றியுள்ளன என்பது தான் அதன் பொருள். சென்ற ரணிலின் ஆட்சியின் போது மத்திய வங்கியின் ஆளுனர் தலைமையில் இலக்குகள் சிறப்பாக வெற்றியடைந்தது போல் இம்முறை இந்த மூன்று அமைசை்சுக்ளும் அதன் இலக்கில் வெற்றிகண்டு ரணிலின் திருப்தியைப் பெற்றுள்ளது. எல்லா அமைச்சக்களும் அந்த இலக்கில் செயல்பட்டால் யூன்பீ கட்சி உருப்படியாகும். அதன் திறைசேரி நிரம்பிவிடும். அதன் கையாட்கள் கோடிஸ்வரர்களானால் நாடு செழித்து பூத்துக்குலுங்கும்.

    ReplyDelete

Powered by Blogger.