அரச ஊழியர்களின் 37,000 தபால் வாக்கு விண்ணப்பங்கள் நிராகரிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 37,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெரும்பாலான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் சரிவர நிரப்படாமல் முழுமையற்றதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்காக சுமார் 675,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாப்பான பொதிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதுடன், தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் பெப்ரவரி 19ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளன.
சுமார் 200,000அரச ஊழியர்கள் தேர்தல் கடமைக்கு நியமிக்கப்படுவார்கள்.
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
Post a Comment