துருக்கி - சிரியா நிலநடுக்கம், உயிரிழந்தவர்கள் 33,000 ஆக உயர்ந்தது
துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,000ஐ கடந்துள்ளது.
துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை இறப்பு எண்ணிக்கை 29,605 ஆக உயர்ந்தது, அதே நேரத்தில் சிரியாவில் 4,500 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட 150 மணி நேரத்திற்குப் பிறகு ஹடாய் மாகாணத்தில் இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தை மீட்கப்பட்டதாக துருக்கிய சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா தெரிவித்தார்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் இரு புதிய பாதைகளை திறக்க நடவடிக்கை எடுத்து வருவதாக துருக்கி தெரிவித்துள்ளது.
Post a Comment