Header Ads



2 பெண்களின் சடலங்கள் மீட்பு

 

- ரஞ்சித் ராஜபக்ஸ -


கினிகத்தேனை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து தாய், மகளது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.


கினிகத்தேனை- பேரகஹமுல பிர​தேசத்தைச் சே​ர்ந்த50 வயதுடைய தாயும் 30 வயதுடைய மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.


குறித்த வீட்டிலிருந்து சில நாட்களாக எவரும் வெளியே வராமை மற்றும் அவர்கள் வசித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக பிரதேசவாசிகள் கினிகத்தேனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.


இதனையடுத்து பொலிஸார் குறித்த வீட்டை உடைத்துச் சென்று உள்​ளே பார்த்த போது, தாயும் மகளும் சடலங்களா கட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.


உயிரிழந்த இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பதுடன், உயிரிழந்த பெண்ணின் கணவனும் மகனும் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும் பொலஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்த இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.