Header Ads



உயிர்த் தியாகியானார் ஷாஜகான் ஆசிரியர் - 2 ஜனாஸாக்களும் மீட்பு


பொலன்னறுவை மாவட்டம் தம்பாலை  ஆற்றை பார்வையிடச் சென்ற, காத்தான்குடியைச் சேர்ந்த தந்தையும் மகளும் தவறி விழுந்து காணாமல் போயிருந்த நிலையில்  இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று(07) காலை காத்தான்குடியைச் சேர்ந்த. ஆங்கில ஆசிரியர்  ஷாஜகான் என்பவரும் (வயது46) மற்றும் அவரது பிள்ளைகள் அடங்களாக 5 பேர் பொலன்னறுவை மாவட்டம் தம்பாலை ஆற்றை பார்வையிட சென்றுள்ளனர்.


ஆற்றின் நீரோட்டத்தை பார்த்துக் கொண்டு ஆற்றின் அருகில் நின்று கொண்டிருந்த போது  ஆசிரியரின் மகள் சயான் பர்சத் (12 வயது)  ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.


தனது மகளை காப்பாற்ற, தந்தை ஆற்றினுள் இறங்க இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்த நிலையில், இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 


- எம் எஸ் எம் நூர்தீன் -


No comments

Powered by Blogger.